22 September 2009 | By: G.Sheik Mansoor.

இச்.. பச்..

இச்சுக்கும் பச்சுக்கும் உள்ள இரண்டு வித்தியாசம்
இச்...
சப்தமாக இருந்தாலும்
சந்தோஷத்தை வெளிப்படுத்தும்

பச்...
வேகமாக விழுந்து
வன்முறையை காட்டும்

இச்...
வாங்கிய சாக்லேட்டை இந்தா
வைத்துக்கொள் என்று கொடுத்துவிட்டால்
ஒரு புன்னகை இனாமாக சேர்த்து கிடைக்கும்
'இச்'

பச்...
கொடுத்ததில் கொஞ்சம் மட்டும்
எடுத்துக் கொண்டால்
எடுத்த வேகத்தில் பலார் என கிடைக்கும்
'பச்'

Logo Design

My logo design for a drama club...



09 September 2009 | By: G.Sheik Mansoor.

1 + 0 = 10.............

ஒரு நாள் சுழியம் சோகமாக இருந்தது,
தனக்கு எந்த மதிப்பும் இல்லை என்று.
ஒன்றுக்கோ பூஜியத்தின் மேல் கொள்ளை ப்ரியம்.
ஒன்று பூஜியத்தின் அருகில் சென்றது
ஒன்றும் பூஜியமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டது.
ஒன்றின் மதிப்பு பத்து மடங்கு ஆனது.
ஒன்றின் ஆசையோ குறையவில்லை
தன் மதிப்பை நூறாக்கிக் கொண்டது.
இன்றாவது அடங்கியதா ஒன்றின் ஆசை
இல்லவே இல்லை, அது வெறும் ஆசையல்ல பேராசை
பிறகென்ன ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி, கோடான கோடி...
அது ஒரு எல்லை அற்ற வளர்ச்சி.
ஒன்றின் மதிப்பு தொட்டதோ உச்சம்
ஒரே ஒரு சந்தேகம் தான் நமக்கு மிச்சம்
இது எண்ணிக்கையின் வளர்ச்சியா?
இல்லை எண்ணங்களின் வீழ்ச்சியா?
02 September 2009 | By: G.Sheik Mansoor.

கானல் நிழல் - Titling

A 10 sec titling for the short film kaanal nilal..........





this is just a draft one......................
soon i'll post the complete work.

முதல் கவிதை.......

இன்றாவது கவிதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் காணவில்லை நட்சத்திரங்களை
மேகத்தின்மீது எனகொன்றும் கோபமில்லை
ஏனென்றால் இந்த புதுகவிதை புத்துணர அதுதானே உதவியது...